என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
தூக்கு போட்டு எலக்ட்ரீசியன் தற்கொலை
எலக்ட்ரீசியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை சாரம் கவிக்குயில் நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பஞ்சாட்சரம். இவர்களது மகன் அருண் பிரகாஷ் (வயது 19). எலக்ட்ரீசியன். அருண் பிரகாசத்திற்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் வேலை செய்யும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் மது குடித்ததாக தெரிகிறது. இதனை அவரது தாயார் பஞ்சாட்சரம் கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அருண் பிரகாஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






