என் மலர்
உள்ளூர் செய்திகள்

தோட்டக்கலை விவசாயிகளுக்கு மானியத்தை முதல்-அமைச்சர், அமைச்சர் வழங்கினர்.
தோட்டக்கலை விவசாயிகளுக்கு மானியம்
தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.32 லட்சம் மானியத்துக்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி:
ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம் பாட்டு திட்டத்தின்கீழ் தோட்டக்கலை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
வெற்றிலை சாகுபடிக்கு பிந்தைய மானியமாக ஒரு சென்டுக்கு ரூ.ஆயிரத்து 500, ஹெக்டேருக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் வழங்கும் திட்டம், புதிய தோட்டம் நிறுவுதல், மலர், காய்கறி, பழ பயிர், வாசனை பயிர்களுக்கு மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 154.87 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த 449 விவசாயிகளுக்கு ரூ.24 லட்சத்து 60 ஆயிரத்து 47, 544.82 சென்டில் வெற்றிலை சாகுபடி செய்த 37 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 230 என மொத்தம் ரூ.32 லட்சத்து 77 ஆயிரத்து 277 நிதி வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
இதற்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண்துறை அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
Next Story






