என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு தற்காப்பு கலைப்பயிற்சி நடந்தபோது எடுத்த படம்.
மாணவிகளுக்கு தற்காப்புக்கலை பயிற்சி
தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலைப் பயிற்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காப்புக் கலைப்பயிற்சி தொடக்க விழா நடைப்பெற்றது. இவ்விழாவில் பள்ளியின் துணை முதல்வர் சுபாஷ் சந்திரன் தலைமை தாங்கி பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார்.
காராத்தே பயிற்சியாளர் ஞானசேகரன் கராத்தே கலையின் பயன்களை பற்றியும், அதன் சிறப்பை பற்றியும் மாணவிகளிடம் உரையாற்றினார். மேலும் 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பயிற்சியளித்தார். தலைமை ஆசிரியை விஜயராணி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர். முடிவில் சிவக்குமார் நன்றி கூறினார்.
Next Story






