என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவுப்படி தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாகமணி (வயது49) என்பவர் அரசம்பட்டு காட்டுக்கொட்டாய் அருகே லாரிடியூப்பில் சாராயத்தை விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சங்கராபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 175 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டது.
இவர் மீது சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.
அதன்படி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடும் நாகமணியை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






