என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

    லாட்டரி சீட்டு விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை பாக்கு முடையான்பட்டு கொக்கு பார்க் சந்திப்பில் கேரளா லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அப்போது 3 பேர் நின்றுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி முடிவுகளை செல்போனில் தெரிவித்துக்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் புதுவை 45 அடி ரோடு பாலன்நகரை சேர்ந்த ராஜாமுகமது(வயது31), லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையை சேர்ந்த செல்வம்(47) மற்றும் ஜீவானந்தபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்த சங்கர்(52) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து  அவர்களிடமிருந்து 3  செல்போன்கள், லாட்டரி விற்பனை பணம் ரூ-.21 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுபோல் நயினார் மண்டபத்தில் கேரள லாட்டரி சீட்டு விற்ற நயினார்மண்டபம் பாரதிவீதியை சேர்ந்த விஜயகுமார்(70) மற்றும் புதுவை சக்திநகரை சேர்ந்த ராஜேந்திரன்(58) ஆகிய 2 பேரையும் முதலியார் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் இளவரசன் கைது செய்தார். அவர்களிடமிருந்து லாட்டரி விற்பனை பணம் ரூ.13 ஆயிரத்து 550 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×