என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்யூனிஸ்டு (எம்.எல்.) கட்சியினர் ஆர்ப்பாட்டம்  நடத்திய காட்சி.
    X
    கம்யூனிஸ்டு (எம்.எல்.) கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

    கம்யூனிஸ்டு எம்எல் ஆர்ப்பாட்டம்

    கம்யூனிஸ்டு (எம்.எல்.) கட்சி சார்பில் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி :

    கம்யூனிஸ்டு (எம்.எல்.) கட்சி சார்பில் சுதேசி மில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.

    மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில கமிட்டி உறுப்பினர் பழனி, ஏ.ஐ.சி.சி.டி.யூ. தலைவர் மோதிலால், கட்டுமான தொழிலாளர் சம்மேளன உறுப்பினர் முருகன், விவசாய, கிராமப்புற தொழிலாளர் சங்கம் மல்லிகா, முற்போக்கு பெண்கள் கழகம் விஜயா, புரட்சிகர இளைஞர் இயக்கம் ராஜராஜன் உட்பட பலர் உரையாற்றினர். 

    உக்ரைனில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் அரசு செலவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தத்தில் ஈடுபட பிரதமர் மோடி தலையிட வேண்டும். உக்ரைனில் படிப்பை தொடர முடியாத மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர மத்திய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண் 
    டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    Next Story
    ×