என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை கொடியேற்று விழா நடந்த காட்சி.
    X
    அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை கொடியேற்று விழா நடந்த காட்சி.

    அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை விழா

    வம்பாகீரப்பாளையம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    புதுச்சேரி:

    புதுவை வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில்  மயான கொள்ளை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காலை மகா அபிஷேகம், யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு யாளி வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து வருகிற 9-ந் தேதி வரை நாள்தோறும் சிறப்பு பூஜைகள், மகா அபிஷேகம், பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா வருகிற 7-ந் தேதி நடக்கிறது. 9-ந் தேதி மஞ்சள்நீர், விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 
    விழாவுக்கான ஏற்பாடுகளை மீனவ கிராம ஆலய கமிட்டி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். 
    Next Story
    ×