என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து வெளியே வந்த காட்சி.
ஒன்றிய குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ஒன்றிய குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் சாதாரண குழு கூட்டம், ஒன்றிய பெருந்தலைவர் ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் லதா கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், குருநாதன் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
கூட்டத்தில் ஒன்றிய நிதியில் நடைபெறும் வேலைகள் குறித்து, கணக்கு வழக்குகளை பிரிவு எழுத்தர் வெங்கடாஜலபதி வாசித்தார். இதில் கழுவந்தோண்டி கிராமத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடம் பணி முழுவதும் நிறைவடைந்த நிலையில் மார்ச் மாதம் இறுத்திக்குள் நீதிமன்ற வளாகம் திறக்க இருப்பதால் பணிகளை விரைந்து முடிக்க தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டதன் பேரில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.30 லட்சம் எடுத்து சாலை அமைப்பதற்காக வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அனுமதி இன்றி நிதி ஒதுக்கீடு செய்ததாக கூறி ஆளும் கட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் 10&க்கும் மேற்பட்டோர் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து துணைத் தலைவர் லதா கண்ணன் கூறுகையில்:
ஜெயங் கொண்டம் கழுவந் தோண்டி அருகே புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் உள்ள சாலைகள் செப்பனிடுவதற்காக பொது நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள சாலையை மன்ற உறுப்பினர் அங்கீகாரம் இன்றி நிதி ஒதுக்கீடு செய்து பணி நடைபெற்று வருகிறது.
இதனை கண்டித்து ஆளும் கட்சி கவுன்சிலர்கள் ஒன்றிய குழு உறுப்பினர் சாதாரண குழு கூட்டத்தில் இருந்து 10& க்கும் மேற்பட்டோர் தற்போது வெளி நடப்பு செய்துள்ளதாகவும், கூட்டம் நடை பெறுவதற்கு முன்பாக இது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இருப்பினும் கவுன்சிலர்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில் கூட்டத்தில் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த பதில் கவுன்சிலருக்கு திருப்தி அளிக்காததால் ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம் என அறிவித்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும் இறவாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரன் கூறுகையில் இனி வருங்காலங்களில் மன்ற கூட்டங்களில் அனுமதி பெற்ற பின்னரே எந்தவொரு தீர்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story