என் மலர்
உள்ளூர் செய்திகள்

கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடை யாள அட்டை வழங்கப்பட்ட காட்சி.
இந்திய கம்யூ. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
இந்திய கம்யூ. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை மாநில செயலாளர் சலீம் வழங்கினார்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தட்டாஞ்சாவடி தொகுதிக்குழு மற்றும் கிளை செயலாளர் கூட்டம் பாக்கமுடையான்பட்டு கார்ல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தொகுதிக் குழு உறுப்பினர் சிவகுமார் தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் முருகன் நடைபெற்ற வேலைகள் சம்பந்தமாக பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுசெல்வம் ஆகியோர் கட்சி முடிவுகளையும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசினார்கள்.
மாநில குழு உறுப்பினர் ஹேமலதா, தொகுதி துணை செயலாளர் செல்வம் தொகுதி பொருளாளர் தனஞ் செழியன், தொகுதிக் குழு மற்றும் கிளை செயலாளர்கள் சத்தியசீலன், முருகன், மூர்த்தி, லோகு ஆகியோர் கலந்து கொண்டனர். கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடை யாள அட்டை வழங்கப்பட்டது.
Next Story






