என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்களுக்கு ஓம்சேகர் அன்னதானம் வழங்கிய காட்சி.
மக்களை திசைதிருப்ப அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு-ஒம்சக்தி சேகர் ஆவேசம்
தமிழக தி.மு.க. அரசு மக்களை திசைதிருப்ப அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போட்டு வருகின்றனர் என ஒம்சக்தி சேகர் பேசினார்.
புதுச்சேரி:
தட்டாஞ்சாவடி தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஜீவா காலனி அருகில் நடைபெற்றது.
தொகுதி செயலாளர் கமல்தாஸ் தலைமை தாங்கினார்.மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் 200 பேருக்கு போர்வை,300 பேருக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:&
அ.தி.மு.க. என்பது தொண்டர்களால் வளர்ந்த இயக்கம் இந்த இயக்கத்தை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடுவதை வாடிக் கையாக தமிழக தி.மு.க. அரசு கொண்டுள்ளது.
பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியாத தி.மு.க. மக்களை திசை திருப்ப இது போன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கள்ள ஒட்டு போட்ட ஒருவரை சட்டப்படி பிடித்து கொடுத்த ஒரு முன்னாள் அமைச்சரை பழி வாங்கும் செயல்களை மக்கள் பார்த்து கொண்டுள்ளனர்.
இது போன்ற பூச்சாண்டி வேலைக்கெல்லாம் அ.தி.மு.க. ஒரு போதும் அஞ்சாது. கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆசியோடு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும்.
இவ்வாறு பேசினார்.
விழாவில் மேற்கு மாநில அவைத்தலைவர் ராமதாஸ், இணை செயலாளர் காசி நாதன், துணை செயலாளர் நாகமணி, கோவிந்தம் மாள்,அணி செயலாளர்கள் விக்னேஸ், மலை. செல்வராஜ், வெரோனிகா, மற்றும் மாசிலா குப்பு சாமி, இருசப்பன், பாஸ்கர்,
மீனா,கலா, அயரின், அய் யனார், தட்டான் சாவடி தொகுதி நிர்வாகி கள் ராமமூர்த்தி, கங்காதரன், பரமசிவன், ராஜேந்திரன், கண்ணியப்பன், லட்சுமணன், இளையராஜா, பச்சையப்பன், மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story






