என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
எலி மருந்து தின்று பெண் டாக்டர் தற்கொலை
எலி மருந்து தின்று பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
ஆந்திர மாநிலம் நிவாகம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ். இவர் கடந்த 33 ஆண்டுகளாக ஜிப்மர் குடியிருப்பில் தங்கி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நலத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ரத்னாமவுனிகா(வயது28). இவர் கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து தற்போது எம்.டி. இறுதியாண்டு படித்து வந்தார்.
ரத்னாமவுனிகா அங்குள்ள விடுதியிலேயே தங்கி இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக ரத்னாமவுனிகா மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக இவர் படித்து வரும் ஆஸ்பத்திரியிலேயே மனநல டாக்டரிடம் ஆலோசனை பெற்று மருந்து&மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்தநிலையில் சம்பவத் தன்று ரத்னாமவுனிகா தனது பெற்றோருக்கு போனில் திருமணநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின்னர் சிறிது நேரத்தில் ரத்னா மவுனிகா எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கல்லூரி நிர்வாகம் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சிய டைந்த மாணவியின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரத்னாமவுனிகாவை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ரத்னாமவுனிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ரத்னாமவுனிகா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணாராவ் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை கோவிந்தசாலை வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரங்கநாயகி. இவர் களது மகன் கணேஷ்(18). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் ரங்கநாயகி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கணேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று விட்டார்.
இதில் மயங்கி விழுந்த கணேசை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேஷ் இறந்து போனார்.
இதுகுறித்து ரங்கநாயகி யின் சகோதரர் ஜெயக்குமார் சேவியர் கொடுத்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






