என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்வியாளர் கோபிநாத் பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான வினாடி வினா போட்டி
அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடை பெற்றது.
அரியலூர்:
அரியலூர் மான்ட் போர்ட் பள்ளியில் மாநில அளவிலான வினாடிவினா போட்டி நடைபெற்றது. போட்டியினை அரியலூர் அரசுகலைக் கல்லூரி முதல்வர் மலர்விழி தொடங்கி வைத்தார்.
போட்டியில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், சேலம், மன்னார்குடி, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு ஆகிய பகுதியிலிருந்து 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு கட்டங்களாக ஆன்லைன் மூலமாக தேர்வு போட்டிகள் நடை பெற்றது. இறுதி நேரடி போட்டிக்கு 15அணிகள் தகுதி பெற்றன, ஜீனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
ஜீனியர் பிரிவில் மதுரை பிரிட்டோ மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், திருச்சி தனலெட்சுமி சீனிவாசன் பள்ளி 2ம் இடத்தையும், ரெட்டி பாளையம் பிர்லா ஆதித்யா பள்ளி 3ம் இடத்தையும்,
சீனியர் பிரிவில் திண்டிவனம் மான்ட்பேர்ட் பள்ளி முதலிடத்தையும், காட்டூர் மான்ட்போர்ட் பள்ளி 2ம் இடத்தையும், பெரம்பலூர் செயின்ட்ஜோசப் பள்ளி 3ம் இடத்தையும்,
சூப்பர்சீனியர் பிரிவில் ஜெயங் கொண்டம் பாத்திமா பள்ளி முதலிடத்தையும், அரியலூர் மான்ட்போர்ட் பள்ளி 2ம் இடத்தையும், சேலம் செயின்ட்மேரிஸ் பள்ளி 3ம் இடத்தையும் பிடித்தன.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மான்ட்போர்ட் பள்ளி முதல்வர் அந்தோணிசாமி செழியன் தலைமை வகித்தார், கல்வியாளர் சென்னை கோபிநாத் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ், பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் எக்ஸ்டா மார்க் நிறுவனத்தின் மண்டல மேலாளர் மோகன், கவிதா, பாஸ்கர், எருத்துக்காரன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சிவா, ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






