என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
ஜெயங்கொண்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலக் குடியிருப்பு பகுதிகளில் வெளிமாநில லாட்டரிசீட்டு விற்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படி நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த அன்பழகன் 36 மற்றும் குமார் 44 என்பதும், அவர்கள் வெளி மாநில லாட்டரிசீட்டு கள் விற்றதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 39 வெளி மாநில லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story






