என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
மணல் கடத்தல் வழக்கில் லாரி பறிமுதல்
மணல் கடத்தல் வழக்கில் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடத்தில் அரசு அனுமதி பெறாமல் கள்ளத்தனமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக ஆண்டிமடம் மண்டல துணை வட்டாட்சியர் செல்வத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
இதைத் தொடர்ந்து ஆண்டிமடம் வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், குவாகம் வருவாய் ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் ஆண்டிமடத்தில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை வழிமறித்தனர். அப்போது லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.
விசாரணையில் லாரியிர் அரசு அனுமதியில்லாமல் கிராவல் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்துஆண்டிமடம் வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் அங்கு சென்ற சப்&இன்ஸ்பெக்டர் நடேசன் இது குறித்து வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தார். மேலும் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.
Next Story






