என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
லாரி மோதி மின் வாரிய ஊழியர் பலி
உடையார்பாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் மின்வாரிய ஊழியர் பலியானார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள கோரைக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் வயது 24.
இவர் கும்பகோணம் மின்வாரியத்தில் தற்காலிக மின் ஊழியராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை பணிக்கு செல்வதற்கு தனது கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளிலில் சென்றுள்ளார். அப்போது நடுவலூர் காட்டு கோவில் அருகே சென்ற போது எதிர்பாரதவிதமாக எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலயே விக்னேஷ் உடல் நசுங்கி பலியானார். விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் தப்பியோடி விட்டார்.
இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






