என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை-கலெக்டர் வல்லவன் தகவல்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுவை மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வல்லவன் தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாவட்ட கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உக்ரைன் நாட்டில் படிப்பு மற்றும் வேலை சம்பந்தமாக சென்றவர்களை மீட்க பிரதமருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது வரை உக்ரைனில் புதுவையை சேர்ந்த 5 மாணவர்களூம் காரைக்காலில் 5 மாணவர் களும் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மட்டுல்லாது புதுவையை சேர்ந்தவர்கள் உக்ரைனில் இருப்பவர்கள் குறித்து தகவல் இருந்தால் அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் உதவிக்காக 24 மணி நேர ஹெல்ப்லைன் +380 997300428, + 380 997300483 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் வல்லவன் தெரிவித்தார்.
Next Story






