என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
புதுச்சேரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி
புதுச்சேரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 5, காரைக்காலில் 5, ஏனாமில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 11, காரைக் காலில் 2, ஏனாமில் ஒருவர் என 14 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை யில் 23, காரைக்காலில் 11, ஏனாமில் 4, மாகியில் 4 பேர் என 42 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 701 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 570 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 89, காரைக் காலில் 58, ஏனாமில் 5, மாகியில் 3 பேர் என 155 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இப்போது 169 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். புதுவை ரெட்டியார்பாளையம் ஜெயா நகரை சேர்ந்த 62 வயது ஆண், மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 64 வயது பெண் என 2 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 88 ஆயிரத்து 474 பேர் தடுப்பூசி போட்டுள் ளனர்.
இந்த தகவலை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Next Story






