என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நேருவீதி  வணிக திருவிழா பரிசுகளை சிவசங்கரன் எம்.எல்.ஏ., நேரு வீதி வியாபாரிகள் சங்க தலைவர் நமச்சிவாயம், துணைத்த
    X
    நேருவீதி வணிக திருவிழா பரிசுகளை சிவசங்கரன் எம்.எல்.ஏ., நேரு வீதி வியாபாரிகள் சங்க தலைவர் நமச்சிவாயம், துணைத்த

    நேரு வீதி வணிகத்திருவிழா பரிசளிப்பு

    நேரு வீதி வணிகத்திருவிழா பரிசளிப்பை சிவசங்கரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    புதுச்சேரி:

     புதுவை  நேரு வீதி வணிகத் திருவிழா பரிசளிப்பு நிகழ்ச்சி வள்ளலார் சாலையில் உள்ள வேல்.சொக்கநாதன் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சிக்கு  சங்கத் தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் இசைக் கலைவன், நடராஜன், குகன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன் கலந்து கொண்டு நிச்சய  பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். செயலாளர் ராஜேந்திரன்நன்றிகூறினார்.

    இதுகுறித்து நேரு வீதி வியாபாரிகள்சங்க தலைவர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த நேரு வீதி வணிகத்திருவிழா பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை  பெற்றுள்ளது.  

    நேரு வீதி வணிக திருவிழாவில் பங்கு பெற்ற வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட பரிசு டோக்கன்களுக்கான நிச்சய பரிசுகள் (வீட்டு உபயோக பொருட்கள்)  28--ந் தேதி வரை  வழங்கப்படுகிறது. 

    மேலும் கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர்.  புதுவை வாடிக்கையாளர்கள் மட்டு மின்றி கடலூர், விழுப்புரம், மரக்காணம் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்களும்  இந்த வணிக திருவிழாவில்  அதிக அளவில் பங்கு பெற்றுள்ளனர்.

    வாடிக்கையாளர்கள் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு சிறப்பான  ஏற்பாடு களை செய்துள்ளோம். தினசரி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை வாடிக்கையாளர்கள் பரிசு களைப் பெற்று செல்லலாம்.  

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பொருளாளர் பழனி அடைக்கலம், ராதாகிருஷ்ணன், வெங்கடேஷ், செல்வகணபதி, மற்றும் நேரு வீதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×