என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய திறனாய்வு தேர்வில் சாதனை படைத்த அமலோற்பவம்பள்ளி மாணவர்களை பள்ளி முதுநிலை முதல்வர் லூர்துசாமி தங்ககாசு வழ
தேசிய திறனாய்வு தேர்வில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சாதனை
2-ம் கட்ட தேசிய திறனாய்வு தேர்வில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆண்டு தோறும் மாநில அளவில் தேசிய திறனாய்வு தேர்வினை நடத்தி மாணவர்களின் திறனை ஊக்கப்படுத்தி கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. 2020-21 கல்வியாண்டிற்கான முதல் கட்ட தேர்வில் வென்ற 22 மாணவர்களில் 6 பேர் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாணவர்களுக்கு 2-ம் கட்ட தேசிய தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் அமலோற்பவம் பள்ளி பிளஸ்-1 மாணவர்களான ஹரிபிரசாந்த், சீனு மற்றும் சஞ்சய் ஆகியோர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் டாக்டர் பட்டம் பெறும் வரை மத்திய அரசின் கல்வி உதவிதொகை பெற தகுதி பெற்றுள்ளனர். சிறப்பான தேர்ச்சி பெற்ற 3 மாணவர்களுக்கும் பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி 4 கிராம் தங்ககாசு வழங்கி கவுரவித்தார்.
Next Story






