என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிடிப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு.
குடிசைக்குள் புகுந்த 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு
பாகூரில் குடிசைக்குள் புகுந்த 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்மை வீரர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டார்.
புதுச்சேரி:
பாகூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் பங்களா வீதியில் புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார்.
கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் மனைக்கு அருகில் இருந்த குடிசை வீட்டில் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை வைத்துள்ளார். அதை எடுப்பதற்காக குமார் குடிசைக்கு சென்ற போது பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தகவலை அறிந்த அதே பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரரான விக்கி என்கி விக்னேஷ் விரைந்து வந்து கொட்டைக்குள் இருந்த பாம்பை லாவகமாக பிடித்து வெளியே கொண்டு வந்தார். அப்போது அது 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்று தெரியவந்தது.
இந்த இந்த பாம்பு கொடிய விஷமுள்ளதாகும். இது மனிதர்களை கடித்தால் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. உடனடியாக கண்ணாடி விரியன் பாம்பை ஒரு சாக்குப் பையில் பிடித்து பாகூர் ஏரிக்கரையில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.
கடந்த சில முன்பு நாட்களுக்கு 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு அதே இடத்தில் பிடிபட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Next Story






