என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.
    X
    அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஜி.கே.மூப்பனார் சிலையை மாற்றி அமைக்க வேண்டும்- சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    போக்குவரத்து பெருகி விட்டதால் ஜி.கே.மூப்பனார் சிலையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும்.
    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை முதலியர் பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    முதலியார் பேட்டை கடலூர் சாலை சந்திப்பில் மறைந்த ஜி.கே. மூப்பனாரின் உருவ சிலை அமைந்துள்ளது. தமிழ் சமூகத்துக்கு அவர் ஆற்றிய தொண்டு காலத்தால் அழிக்க முடியாதது.  காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அவரது உழைப்பு மகத்தானது. இவரது உருவ சிலை  முதலியார்பேட்டை பகுதியில் இருப்பது தொகுதிக்கு கிடைத்த பொக்கிஷம்.  முன்பு   போக்குவரத்து குறைவாக இருந்த கால கட்டத்தில் இந்த சிலை நிறுவப்பட்டது. 

    தற்போது மரப்பாலம் சந்திப்பு புதுவை நகர பகுதிக்குள் நுழையும் பிரதான நுழைவு வாயில்களில் ஒன்று.  இந்த பகுதியில் போக்குவரத்து பெருகிவிட்டதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

    எனவே, கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜி.கே.மூப்பனாரின் சிலையை சில அடி தூரம் பின்னோக்கி நகர்த்தி வைத்தால் போக்குவரத்துக்கு தடையின்றி இருக்கும். எனவே, சிலையை மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×