என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
எந்திரத்தில் சிக்கி வாலிபரின் கைவிரல்கள் துண்டானது
தனியார் கம்பெனியில் விபத்து எந்திரத்தில் சிக்கி வாலிபரின் கைவிரல்கள் துண்டானது
புதுச்சேரி:
வில்லியனூர் கூடப் பாக்கம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி ஆனந்தநாயகி. இவர்களது மகன் தினகரன் (வயது19) டிப்ளமோ படித்துள்ளார். இவர் பொறையூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டி ருந்த போது எந்திரத்தை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது வலது கை எந்திரத்தின் உள்ளே சிக்கிக் கொண்டது.
இதில் அவரது கை விரல்கள் நசுங்கி துண்டானது. ரத்தம் கொட்டிய நிலையில் இருந்தவரை உடன் வேலை பார்ப்பவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அளித்த பின்னர் கூடப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அவரது 3 விரல்களும் துண்டானது.
இதுகுறித்து தினகரனின் தாய் ஆனந்தநாயகி வில்லி யனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் புதிதாக வேலைக்கு சேர்ந்த எனது மகன் தினகரனுக்கு முறையான பயிற்சியும், எந்திரத்தை இயக்குவதற்கான அனுபவமும், பாதுகாப்பு உபகரணமும் வழங்காத தனியார் கம்பெனி காண்டிராக்டர் வீரப்பன், சூப்பர்வைசர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.
Next Story






