என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
கர்ப்பிணி மயங்கி விழுந்து சாவு
வீட்டில் மயங்கி விழுந்து கர்ப்பிணி இறந்து போனார்.
புதுச்சேரி:
கடலூர் பெரியகாட்டுப் பாளையம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி புஷ்பவள்ளி. இவர்களுக்கு வினோதா(வயது28) உள்பட 3 மகள்கள் உள்ளனர். மோகன் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்தநிலையில் மூத்த மகள் வினோதாவுக்கும் வில்லியனூர் புதுப்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் இளமாறனுக்கும் (28) 5 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது வினோதா மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்தநிலையில் வினோதா வீட்டில் மயங்கி கிடந்தார். இதனையறிந்த இளமாறனின் உறவினர்கள் அவரை மீட்டு ஆட்டோவில் வில்லியனூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையறிந்த வினோதாவின் தாய் புஷ்பவள்ளி வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






