என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியோர் உதவி தொகை ஆணையை முதல்--அமைச்சர்  ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கிய காட்சி.
    X
    முதியோர் உதவி தொகை ஆணையை முதல்--அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கிய காட்சி.

    முதியோர் உதவித்தொகை ஆணை-ரங்கசாமி வழங்கினார்

    2,100 புதிய பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ஆணையை ரங்கசாமி வழங்கினார்.
    புதுச்சேரி:

    புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் முதியோர், ஆதரவற் வேறாருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    2018-19-ம் ஆண்டு விண்ணப்பித்து நிலுவையில் இருந்த 2 ஆயிரத்து 100 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. முதல்கட்டமாக தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதியை சேர்ந்த புதிய பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறும் ஆணையை சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அறையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி  வழங்கினார். 

    நிகழ்ச்சியில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், துறை செயலர் உதயகுமார், இயக்குனர் முத்துமீனா, துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×