என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுராந்தகத்தில் மறு தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர்கள் சாலை மறியல்
மதுராந்தகத்தில் மறு தேர்தல் நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர்கள் சாலை மறியல்
மதுராந்தகம் நகர மன்ற தேர்தலில் வாக்கு எண்ணும் மையத்தில் குளறுபடி என அதிமுக வேட்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நகர மன்றத் தேர்தல் நடைபெற்றது. மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன அதில் திமுக (21) வார்டுகளிலும் கூட்டணி கட்சியினர் 3 வார்டுகளிலும் அதிமுக 24 வார்டுகளில் போட்டியிட்டன இதில் அதிமுக நகர மன்ற தலைவர் வேட்பாளராக 2 வந்து வார்டில் அதிமுக சார்பில் மோகனா சரவணன் போட்டியிட்டார்.
நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பெட்டியில் முத்திரை இல்லை என்றும் வாக்குப் பெட்டியில் உள்ள அனைத்து வாக்குகளும் திமுகவிற்கு விழுந்துள்ளதாகவும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் திமுகவினர் உள்ளே புகுந்து பெட்டிகளில் மாற்றியுள்ளதாக கூறி மதுராந்தகம் -சூனாம்பேடு சாலையில் நேற்று மோகனா சரவணன் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மதுராந்தகம் டிஎஸ்பி பாரத் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் அதிமுக இடையே பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது அதிமுக வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் திமுகவினர் உள்ளே புகுந்து வாக்குப் பெட்டிகளை மாற்றியதாகவும் மறுதேர்தல் நடத்த கோரியும் கூறினர். அதற்கு போலீசார் நீங்கள் முறையாக மனு கொடுத்து மறு தேர்தலை நடத்துமாறு அதிகாரியிடம் கூறுங்கள் என்று கூறினார் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story