என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பெண்ணை தாக்கிய 2 பேர்
கடனை திருப்பித்தராததால் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ஹெலன்மேரி (வயது 60). இருவரும் சவபெட்டி செய்யும் வேலை செய்து வருகின்றனர்.
செல்வம் ரெயின்போ நகரில் வசிக்கும் தனது தம்பியான அலெக்சாண்டரிடம் ரூ.30 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். போதிய வருமானம் இல்லாததால் அந்த கடனை அவர்களால் திருப்பி செலுத்த முடியவில்லை.
அலெக்சாண்டர் பலமுறை கடனை கேட்டும் தரவில்லை. நேற்று மாலை அலெக்சாண்டரின் மகன்களான ஒகிஸ்தயான், அகஸ்தீன் ஆகியோர் செல்வத்தின் வீடடுக்கு வந்து பணத்தை திருப்பித்தரும்படி கேட்டனர்.
மேலும் செல்வத்தின் மனைவி ஹெலன்மேரியை கீழே தள்ளி தாக்கினர். வீட்டில் இருந்த பிணம் குளிரூட்டும் எந்திரத்தையும் உடைத்து இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து ஹெலன்மேரி அளித்த புகரின் அடிப் படையில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடிவருகின்றனர்.
Next Story






