என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ் பற்றாளர்கள் கூட்டமைப்பு அரசுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்திய காட்சி.
    X
    தமிழ் பற்றாளர்கள் கூட்டமைப்பு அரசுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்திய காட்சி.

    தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கக்கோரி அரசுக்கு மனு அனுப்பும் போராட்டம்

    தமிழ் பற்றாளர்கள் கூட்டமைப்பு சார்பில்தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கக்கோரி அரசுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை தமிழ் பற்றாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம்   நடந்தது.

    புதுவை தமிழ் வளர்ச்சித் துறையை உடனடியாக அமைக்க வேண்டும். தமிழ் மொழி தொடர்பான அனைத்து விருதுகளையும் உடனடியாக வழங்க வேண்டும். படைப்பாளர் களுக்கு ஊக்கம் தரும் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கள் மனுவாக அனுப்பி வைக்கப்பட்டது. 

    தொடர்ந்து உலகத்தாய் மொழி நாள் தலைமை தபால்நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது. மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தமிழர்களம் அழகர், அண்ணாபேரவை சிவஇளங்கோ, வரலாற்ற சங்கம் ராசசெல்வம், நாணயவியல் கழகம் கோபிரான், மக்கள் இயக்கம் தாமோதரன், தமிழ்தேசிய பேரியக்கம் வேல்சாமி, நுகர்வோர் எதிரொலி வீரசேகரன், மனித உரிமை அமைப்பு ரகுபதி, கலாச்சார புரட்சி இயக்கம் பிராங்களின் பிரான்சுவா, திருவளவன், பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

    ஏற்பாடுகளை சிந்தனையாளர்கள் பேரவை தலைவர் கோ.செல்வம், செயலாளர் சண்முக கார்த்திக், சிறப்பு தலைவர் செல்வமணி, சுசிலா, சரஸ்வதி, கவுசல்யா, மணிமேகலை, ராஜாராம், காமராஜ், ஜெகதீசன், பழனி பாஸ்கரன், இளமுருகன், சசிகுமார், இசையரசி உட்பட பலர் செய்திருந்தனர்.
    Next Story
    ×