என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலியமேட்டில் சாலை பணியை அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகா
    X
    சேலியமேட்டில் சாலை பணியை அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகா

    ரூ.2.44கோடியில் தார் சாலை பணிகள்

    சேலியமேட்டில் ரூ.2.44கோடியில் தார் சாலை பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
    புதுச்சேரி: 

    ஏம்பலம் தொகுதி அரங்கனூரிலிருந்து பாகூர் ஏரிக்கரை வரை சுமார் 3.250 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய தார்சாலை அமைக்க பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்தது. 

    இதன் செலவீடு மதிப்பு ரூ.2கோடியே 44 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். இதற்கான பூமி பூஜை  சேலியமேடு பகுதியில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் ராஜவேலு முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு மற்றும் செயற்பொறியாளர் பாஸ்கரன் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×