என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஐகோர்ட்டு உத்தரவை மதிக்காமல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது-தி.மு.க. கண்டனம்
தவறான புரிதலுடன் ஐகோர்ட்டு உத்தரவை மதிக்காமல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை உயர்நீதி மன்றம், புதுவை உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு சம்பந்தமாக வழக்கை சமூக நீதிக்காக போராடி வரும் தி.மு.க. உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு விசாரிக்கும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இட ஒதுக்கீடு மற்றும் தேர்தல் நடத்துவது சம்பந்தமான குழப்பமான கருத்துக்களை சென்னை ஐகோர்ட்டு ஆணைக்கு மதிப்பளிக் காமல் தவறான சட்ட புரிதலுடன் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளி யிட்டு வருவது கண்டனத் திற்குரியது.
அண்மையில் மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு சம்பந்தமாக சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதையும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மதிப்பளித்து தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கில் நீதிமன்றத்தின் நிலைபாட்டை அறிந்த பின் பழங்குடியினருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் முறையான இட ஒதுக்கீடு அளித்து விரைவாக உள்ளாட்சித்தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story






