என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியுடன் பரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட காட்சி.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ராமானுஜர் இன்டலெக்ட் நிறுவனம் இணைந்து கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
புதுச்சேரி:
புதுவை, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியுடன் ராமானுஜர் இன்டலெக்ட் நிறுவனம் இணைந்து கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ராமானுஜர் இன்டலெக்ட் நிறுவனத்தின் நிறுவனர் தேவிபிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக் கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணன் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடெமிக் டீன் அன்புமலர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறை வேல்முருகன், வேலை வாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சரின் முதல்வர் மனோகரன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முத்து லட்சுமி மற்றும் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






