என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 பேர் கோர்ட்டில் சரண்
    X
    3 பேர் கோர்ட்டில் சரண்

    மாமல்லபுரம் மீனவர் கொலையில் 3 பேர் கோர்ட்டில் சரண்

    மாமல்லபுரம் அருகே மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 26). கடந்த 9-ந் தேதி அவரை மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தன. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏற்கனவே 4 பேரை கைது செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக பப்லு, கோபி உள்பட 3 பேர் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்து உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து இருக்கிறார்கள்.
    Next Story
    ×