என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் தொழிற்சாலையை கண்டித்து போராட்டம் நடந்தபோது எடுத்தபடம்.
தனியார் தொழிற்சாலையை கண்டித்து போராட்டம்
செம்பியம்பாளையத்தில் தனியார் தொழிற்சாலையை கண்டித்து போராட்டம் நடந்தது.
புதுச்சேரி:
ஏம்பலத்தை அடுத்த செம்பியம்பாளையம் கிராமத்தில் தனியார் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரி பகுதியை சேர்ந்த ஆதி என்பவர் பணிபுரிந்து வந்தார் கடந்த மாதம் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டை சரிந்து விழுந்ததில், இவரது பின்பக்க கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், எலும்பு முறிவு காரணமாக பணிக்கு செல்ல முடியாமல் இருந்தது. இவருக்கு தொழிற்சாலையின் மூலம் உரிய இழப்பீடு கிடைக்கவில்லை.
இதையடுத்து தொழிற்சாலையை கண்டித்து சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சாலை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் ஜெகன், ரஜினி குமார், ஏழுமலை, சீனிவாசன், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






