search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதை படத்தில் காணலாம்
    X
    குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதை படத்தில் காணலாம்

    குப்பைகள் எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு

    குப்பைகள் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருப்பதால் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்
    மூங்கில்துறைப்பட்டு:

    ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வடமாமாந்தூர் இங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் சேகரிக்கும் குப்பையை பள்ளியின் பின்பகுதியில் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்படுவதால் புகை அதிக அளவில் உற்பத்தியாகி வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குப்பைகளை எரிப்பதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்கள் முழுவதும் குப்பைகள் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருப்பதால் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் எனவே குப்பையை தீயிட்டு எரிக்க படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×