என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிங்கார வேலர் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
சிங்காரவேலர் சிலைக்கு ரங்கசாமி மாலை
பிறந்த நாளையொட்டி- சிங்காரவேலர் சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு செய்தி விளம்பரத்துறை சார்பில் தியாகி சிங்காரவேலர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி புதுவை-கடலூர் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு முதல்& அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன் தலைமையில் வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், தொகுதி பொறுப்பாளர் கோபால், துணை அமைப்பாளர் செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தைரியநாதன், மீனவர் அணி தனசேகர், தொகுதி செயலாளர் சக்திவேல் மற்றும் தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், நிர்வாகிகள் அபிஷேகம், கீதநாதன், சேதுசெல்வம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதேபோல பல்வேறு மீனவ அமைப்புகள் சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
Next Story






