என் மலர்
உள்ளூர் செய்திகள்

வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அருகில் அமைச்சர் சந்திரபிரியங்கா உள்ளார்.
விவசாயிகளை சிரமப்படுத்தாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்-வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
விவசாயிகளை சிரமப்படுத்தாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் வைத்தி லிங்கம் எம்.பி. தலைமையில் காரைக்காலில் நடந்தது.
அப்போது மத்திய அரசின் மூலம் மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ள அனைத்து திட்டங்களையும் அமைச்சர் சந்திரபிரியங்கா, எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா, துணை கலெக்டர் பாஸ்கரன் மற்றும் இதர உறுப்பினர்கள ஆய்வு செய்தார்கள்.
கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய தகவல் மற்றும் விளக்கங்களை அளித்தார்கள். வைத்திலிங்கம் எம்.பி. கூறுகையில் இந்திய உணவுக்கழக அதிகாரிகளிடம் நெல் கொள்முதலை அதிகப்படுத்த விவசாயிகளுக்கு எந்தவித சிரமத்தையும் அளிக்க கூடாது. நெல் கருப்பாக இருப்பதால் திருப்பி அனுப்புவதாக புகார்கள் வந்துள்ளன. விவசாயிகளை சிரமப்படுத்தாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நாஜீம் எம்.எல்.ஏ. கூறுகையில், குடிசை மாற்று வாரியத்தில் அமைந்துள்ள குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாக புகார்கள் வருகின்றன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை உடனடியாக சரி செய்து தர உத்தரவிட வேண்டும். குடிசை மாற்று வாரியம் தரும் வீடு கட்டும் மானியத்தை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் என கூறினார்.
விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என வைத்திலிங்கம் எம்.பி. கேட்டுக் கொண்டார்.
Next Story






