என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலைப்பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன், கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.
பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்ல புதிய சாலை
பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்ல ரூ.72 லட்சம் செலவில் புதிய சாலை பணியை அமைச்சர் லட்சுமிநாராயணன்-கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:
சுற்றுலா பயணிகள் பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்ல ஏற்ற வகையில் ரூ.72 லட்சம் செலவில் சாலை பணியை அமைச்சர் லட்சுமி நாராயணன்- கென்னடி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
புதுவைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கி றார்கள். அவர்கள் கடற்கரை அழகை கண்டு களிக்கும் வகையில் வம்பாகீரப்பாளையத்தில் பாண்டி மெரினா பீச் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் சிரமமின்றி வானங்களில் பாண்டி மெரினா பீச்சிக்கு சென்றும் வரும் வகையில் புதுவை பொதுப்பணித்துறை மூலம் புதுவை சுப்பையா சாலையிலிருந்து வம்பாகீரப் பாளையம் வழியாக பாண்டி மெரினா பீச்சிக்கு ரூ.72 லட்சம் செலவில் சாலை அமைக்கப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை விழா நடந்தது. உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கென்னடி முன்னிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்திய மூர்த்தி, செயற்பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் சீனிவாசன், வம்பாகீரப்பாளையம் பஞ்சாயத்து தலைவர் தனசேகரன், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, பொருளாளர் சண்முகம், கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோக்கியராஜ், மீனவரணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் செல்வம், மணிகண்டன், முரளி, செங்குட்டு, தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






