என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்காஞ்சியில் மாசி மக தீர்த்தவாரியில் பங்கேற்ற உற்சவ மூர்த்திகள்.
திருக்காஞ்சியில் மாசிமக தீர்த்தவாரி- பக்தர்கள் சாமி தரிசனம்
திருக்காஞ்சியில் மாசிமக தீர்த்தவாரியையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நிகழ்ச்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் 17-ந்தேதி நடந்தது.
இதையொட்டி திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தானத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வல மாக வந்து, கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அங்கு கூடிய பக்தர்கள், பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சங்கராபரணி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் நடந்த மாசி மக விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






