என் மலர்
உள்ளூர் செய்திகள்

46 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கு வைக்கப்பட்டுள்ள உபகரண பொருட்கள்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் 46 வாக்குச்சாவடிகளுக்கு உபகரண பொருட்கள் தயார் நிலை
கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 46 வாக்குச்சாவடிகளில் வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
கள்ளக்குறிச்சி:
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 46 வாக்குச்சாவடிகளில் வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எனவே வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடி மை, பேனா, வாக்குப்பதிவு அலுவலர்கள் பயன்படுத்தக்கூடிய படிவங்கள், சீல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சீல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான உபகரண பொருட்கள்,கொரோனா தடுப்பு உபகரண பொருட்கள் 46 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கு நகராட்சி அலுவலகத்தில் தயார் நிலையில் வைத்துள்ளார். தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி உபகரண பொருட்களை நகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் நகராட்சி தேர்தல் உதவியாளர் தாமரைச்செல்வன் மற்றும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் இருந்தனர்.
Next Story






