என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
காங்கிரசிலிருந்து வெளியேறுபவர்களால் இளைஞர்களுக்கு வழி கிடைத்துள்ளது- ஏ.வி.சுப்பிரமணியன் அறிக்கை
காங்கிரசிலிருந்து வெளியேறுபவர்களால் இளைஞர் களுக்கு வழி கிடைத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியிலிருந்து சில முன்னாள் அமைச்சர்கள் வெளியேறுகிறார்கள் என்ற தகவல் தேர்தல் நடக்கும் காலத்தில் எப்போதும் வரும்.இது புதிதல்ல. ஆயிரம் கால் மண்டபத்திலே ஒருகால் குறைந்தால் ஒன்றும் ஆகி விடப்போவதில்லை.
காங்கிரஸ் கட்சியை தாங்கி நிற்கிறோம் என்று தாங்களே, தங்களை பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் வெளியேறுகிறார்கள்.
இவர்கள் வெளியேறுவதால் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற இளைஞர்களுக்கு வழி கிடைத்து, இளைஞர்களுக்கு ஒரு எதிர்காலத்தை உண்டாக்கி கொடுக்கிறது.
137 ஆண்டுகால வரலாறு கொண்ட காங்கிரஸ் கட்சி யின் கொள்கைகளில் பிடிப்பு இல்லாமல், சந்தர்ப்பவாதிகள் ஆக இத்தனை ஆண்டுகாலம் இருந்துவிட்டு, இப்போது வெளியேறுவது காங்கிரஸ் பேரியக்கத்திற்கு நல்லதுதான்.
ஆண்டு அனுபவித்த மூத்த முன்னாள் அமைச்சர்கள் வெளியேறுவதால், காங்கிரஸ் கட்சிக்கு நன்மை தான் ஏற்படுமே தவிர, எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக எதிர்காலம் விரைவில் சிறப்பாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story






