என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து நலன் பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
கடந்த 2020-2021 ஆம் ஆண்டுகளில் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர் களுக்கு கொரோனா ஊரடங்கு கால நாட்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போதும், பொங்கல் தொகுப்பு வழங்கும் போதும் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது.
தற்போது அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களை நலவாரிய உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள புதிய இணைய தளம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேற்கண்ட இணையதளத்தில் ஏற்கனவே நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து புதுப்பித்தல் இல்லாதவர்கள் மீண்டும் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த இணையதளத்தில் புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்தவர்களை தவிர பழைய நடைமுறையில் புதுப்பித்தல் செய்தவர்கள் அப்டேசன் என்ற பகுதியில் நுழைந்து ஆதார் எண், ஸ்மார்ட் கார்டு, வங்கி கணக்கு விபரங்களை வருகிற
மார்ச் 31-ந்தேதி-க்குள் இணைக்க வேண்டும். மேற்கண்ட விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலமே நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
Next Story






