என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை மேம்படுத்தும் பணியை அமைச்சர்கள்  தொடங்கி வைத்த காட்சி.
    X
    சாலை மேம்படுத்தும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.5.81 கோடியில் சாலை மேம்படுத்தும் பணி- லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார்

    மூலக்குளம் முதல் வில்லியனூர் வரை ரூ.5.81 கோடியில் சாலை மேம்படுத்தும் பணியை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளம் முதல் வில்லியனூர் மூலக்கடை வரை உள்ள பெரம்பை சாலையை ரூ.5 கோடியே 81 லட்சத்தில் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிக்கான பூமிபூஜை விழா நடந்தது.

    பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்து பணிகளை தொடங்கி வைத்தார்.  குடிமைப்பொருள் வழங்கல் துறை  அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் முன்னிலை வகித்தார். 

    நிகழ்ச்சியில் சிவ சங்கர் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்  சத்தியமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர்  ரமேஷ்குமார், ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    இந்த பணியை 9 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×