என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை ஓர கடையில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்கள்.
    X
    சாலை ஓர கடையில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக் பொருட்கள்.

    நாமக்கல்லில் சாலை ஓர கடைக்கு வணிகர்கள் திடீர் எதிர்ப்பு

    நாமக்கல்லில் சாலை ஓரம் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைக்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல்லில் செயல்பட்டு வரும் எலட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம், இன்று வேலகவுண்டம்பட்டி பஸ் நிறுத்தத்தில் செல்போன், டிவி, மிக்ஸி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை காட்சிப்படுத்தி கடை அமைத்து விற்பனை செய்தது.

    இதுபற்றி தகவல் அறிந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், செல்போன் விற்பனையாளர்கள் சங்க தலைவர் பத்மநாபன், பேரமைப்பு மாநில துணை தலைவர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர். 

    உள்ளூர் வணிகர்களும், மாவட்ட வணிகர் சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அரசு அனுமதி பெறாத அந்த தற்காலிக கடையினை உடனடியாக அந்த நிறுவனத்தினரே அப்புறப்படுத்தினர்.

    இது போன்று முறையான அனுமதி இல்லாமல், தற்காலிக சாலையோர கடைகள் அமைத்து தொடர்ந்து சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இதுபோன்ற நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது.
    Next Story
    ×