என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணக்கோலத்தில் எழுந்தருளிய நன்மை தருவார் சார்பில் சிவாச்சாரியார்கள் மத்தியபுரி அம்மனுக்கு மங்கல நாண் அணிவித்ததை
    X
    மணக்கோலத்தில் எழுந்தருளிய நன்மை தருவார் சார்பில் சிவாச்சாரியார்கள் மத்தியபுரி அம்மனுக்கு மங்கல நாண் அணிவித்ததை

    இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் திருக்கல்யாணம்

    மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசித்திருவிழா திருக்கல்யாணம் இன்று நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
    மதுரை

    மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷம் மற்றும் முக்கிய நாட்களில் திரளான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில்  ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும்.  அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி மற்றும் அம்பாள் வீதிஉலா நடந்தது. 13ந்தேதி சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலையும், 14ந்தேதி பிக்ஷாடணர் புறப்பாடும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று(செவ்வாய்க்கிழமை) நடந்தது. இதையொட்டி சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 11 மணியளவில் பிரியா விடையுடன் நன்மை தருவார்&மத்தியபுரி அம்மன்  கோவிலில் உள்ள கல்யாண மேடையில் எழுந்தருளினர். 

    அதனை தொடர்ந்து யாக பூஜைகள் நடந்தன. காலை 11.47 மணி முதல் 12  மணிக்குள் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. நன்மை தருவார் சார்பில் சிவாச்சாரியார்கள் மத்தியபுரி அம்மனுக்கு மங்கல நாண் அணிவித்து திருமணத்தை நடத்தினர். இதில் பெண்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

    இன்று மாலை  மகா அபிஷேகமும், இரவு யானை&புஷ்ப பல்லக்கில் சுவாமி&அம்பாள் 4 மாசி வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். நாளை (16ந்தேதி) காலை தோரோட்டமும், நாளைமறுநாள் (17ந்தேதி) கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 

    வருகிற 18ந்தேதி பைரவர் பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா  ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சூப்பிரண்டு கணபதிராமன், ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் செய்துள்ளனர். 
    Next Story
    ×