என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கோவை மாவட்டத்தில் நர்சரி, மழலையர் பள்ளிகள் நாளை முதல் திறப்பு
பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கோவை,
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த் தப்பட்டு வருகிறது. இதனை யடுத்து கடந்த 1ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற நர்சரி வகுப்புகளுக்கான பள்ளிகளையும், மழலையர் பள்ளிகளையும் திறந்து நேரடி வகுப்புகள் நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்தில் நாளை முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இந்த பள்ளிகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் படிப்பதால், அவர்களுக்கு கொரோனா தொற்று மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத வகையில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் குழந்தைகள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கவும், அவர்களுக்கு உற்சாகமூட்டும் பாடங்களை நடத்தி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆசிரி யர்களுக்கு அறிவுறுத்தி உள் ளனர். அரசு பள்ளிகளில் சிலவற்றிலும் அவற்றின் அருகே உள்ள அங்கன்வாடி மையங்களிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் உள்ளது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் பள்ளிகளில் தேர்தல் முடிந்ததும் 21ந் தேதி முதல் வகுப்புகளை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
Next Story






