search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசனை வரவேற்ற காட்சி.
    X
    தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசனை வரவேற்ற காட்சி.

    தூய்மை பணியாளர்கள் குறைகளை தீர்க்க வேண்டும்-ஆணையர் அறிவுறுத்தல்

    தூய்மை பணியாளர்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று ஜிப்மர் அதிகாரிகளிடம் தேசிய ஆணைய தலைவர் அறிவுறுத்தினார்.
    புதுச்சேரி:

    தேசிய  தூய்மை  பணியாளர் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் தூய்மை பணியாளர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து தேவைகளை நிறைவேற்றி வருகிறது.

    அதன்படி புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் கூட்டம்
    நட ந்தது. ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வார்ல் உட்பட அதிகாரிகள், பணியாளர் களின் பிரதிநிதிகள், ஒப்பந்த நிறுவனத்தினர் பங்கேற்றனர்.  

    கூட்டத்தில், ஜிப்மரில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் நிலை, அவர்களின் அடிப்படை வசதிகள், குறைகள், தேவையான  பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

    புதுவை ஜிப்மரில் ஆயிரத்து 31, காரைக்காலில் 39 பேர் என ஆயிரத்து 70  பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

    இவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு சாதனங்கள், பணிபாதுகாப்பு சலுகைகள் குறித்து ஜிப்மர்  நிர்வாகம் விளக்கியது. தூய்மை பணியாளர்கள் தரப்பில் சில கோரிக்கைகள், குறைகள் முன்வைக்கப்பட்டது. அவர்களின் தேவைகளை  தீர்த்து வைக்க ஜிப்மர் நிர்வாகத்திடம், ஆணைய தலைவர் அறிவுறுத்தினார்.
    Next Story
    ×