என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
    X
    முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

    கோவையில் தேர்தலை அமைதியான முறையில் நடத்த வழிவகை செய்ய வேண்டும் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் சமீரனை சந்தித்து மனு அளித்தனர்
    கோவை:

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஏ.கே. செல்வராஜ், கே.ஆர். ஜெயராமன் ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:&

    கோவை மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் ஏற்பாட்டின் பேரில் சென்னை, கரூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த ரவுடிகளை கொண்டு தி.மு.க.விற்கு ஆதரவாக தேர்தல் வேலைகளில் ஈடுபடுத்துவதும், சட்டத் திற்கு புறம்பான செயல் களிலும் ஈடுபட்டு வருகின் றனர். அவர்கள் சட்டவிதி களுக்கு உட்பட்டு தேர்தல் பணியாற்றி வரும் அ.தி.மு.க. தொண்டர்கள் மீது ஆங்காங்கே தாக்குத லில் ஈடுபடுவதும், வாக்கா ளர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டும் வருகின்றனர். 

    நேற்று கோவை குனியமுத்தூர் வார்டு எண் 90&ல் வெளியூரைச் சேர்ந்தவர்கள் மூலம் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பண வினியோகத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது புகார் கொடுத்த அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளரான கல்யாண சுந்தரம் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததுடன் அவரையும் அவருடன் 8 அ.தி..மு.க. தொண் டர்களையும் கண்ணியமற்ற முறையில் தரையில் அமர வைத்தும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசியும் காவல்துறையின் அதிகாரத்தை கொண்டு குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மிரட்டி உள்ளார். சம்பந்தமில்லாமல் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் இரவு முழுவதும் அடைத்து வைத்து மிரட்டி இருக்கிறார். 

    கடந்த காலங்களில் அமைதி பூங்காவாக திகழ்ந்த கோவையில் வாழும் பொதுமக்களுக்கும், வாக்காளர்களுக்கும் வெளியூர் ரவுடிகளின் செயல்களால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நியாயம் கேட்கச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களும் தரக்குறைவாக நடத்தப்பட்டு உள்ளனர். எனவே தாங்கள் உடனடியாக தலையிட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 
    Next Story
    ×