என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட குக்கர்
    X
    பறிமுதல் செய்யப்பட்ட குக்கர்

    வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ‘குக்கர்கள்’ பறிமுதல்

    செய்யூர் அருகே வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 10 குக்கர்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    மதுராந்தகம்:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோல் செய்யூர் அருகே உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் தேர்தல்களை கட்டி உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பரிசு, பணம் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு இடைக்கழிநாடு பேரூராட்சி 19-வது வார்டு கோட்டைக்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க குக்கர் வைக்கபட்டு உள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பறக்கும் படை அலுவலர் வெங்கடேசன், உதவி ஆய்வாளர் பாபு, காவலர் சந்திரன் ஆகியோர் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் சோதனை செய்தனர்.

    அங்கு வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 10 குக்கர்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை இடைக்கழிநாடு பேரூராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தா ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×