என் மலர்
உள்ளூர் செய்திகள்

வியாபாரிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் சேலை-குடை வழங்கிய காட்சி.
பெரியமார்க்கெட் சாலையோர வியாபாரிகளுக்கு குடை-சேலை
சாலையோர வியாபாரிகளுக்கு குடை, சேலை வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா பிரச்சார அணி அமைப்பாளர் பாண்டி ரவி மற்றும் உருளையன்பேட்டை தொகுதி பிரச்சார அணி அமைப்பாளர் குமார் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் பெரியமார்க்கெட் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் 100 பேருக்கு சேலை-குடைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், வக்கீல் அசோக்பாபு ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை தொகுதி அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர் பத்மாவதி, ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ், ஹரி, பிரச்சார அணி துணை அமைப்பாளர் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story






