என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் தேசிய தொழு நோய் எதிர்ப்பு தினவிழா நடந்த போது எடுத்த படம்.
தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழா
பெரம்பலூரில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தினவிழா நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் ஸ்பர்ஷ் தொழு நோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின விழா நடந்தது.
பெரம்பலூர் கிறிஸ்டியன் நர்சிங் கல்லூரியில் நடந்த விழாவிற்கு கல்விநிறுவன தலைவர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கல்விநிறுவன செயலாளர் மித்ரா, அரசு டாக்டர் வளவன், நர்சிங் கல்லூரி முதல்வர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
பெரம்பலூர் மாவட்ட மருத்துவபணிகள் துணை இயக்குநர் (தொழுநோய்) டாக்டர் சுதாகர் திட்ட விளக்கவுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (தொழுநோய்) சாந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் கல்லூரி துறை தலைவர் கார்மேகம் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்,
முன்னதாக திருச்சி மருத்துவபணிகள் துணை இயக்குநர் (தொழுநோய்) நலக்கல்வியாளர் முகமது இஸ்மாயில் வரவேற்றார். முடிவில் லப்பைக்குடிகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் செல்வபாண்டியன் நன்றி கூறினார்.
Next Story






