என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் தபால் ஓட்டு போடுவதற்கு 14 ஆயிரம் பேர் விண்ணப்பம்

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் அந்த வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசாருக்கு தபால் ஓட்டு உரிமை வழங்கப்படுகிறது.

    அவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வழங்கப்படுகின்றன. இன்று மாலைக்குள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஓட்டு எண்ணும் நாளான 22-ந்தேதி காலை 8 மணிக்குள் அந்தந்த வார்டுக்குட்பட்ட உதவி தேர்தல் அதிகாரிக்கு வந்து சேர வேண்டும்.

    இதுவரையில் 14 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போடுவதற்காக விண்ணப்பம் பெற்றுள்ளனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் தேர்தல் ஆணைய விதிமுறைகள் படி ஓட்டு எண்ணிக்கை தொடங்கக்கூடிய நேரத்துக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு கிடைக்கப்பெற வேண்டும்.

    தேர்தல் அதிகாரியின் முறையான முகவரியை எழுதி குறிப்பிட்ட காலத்துக்குள் தபால் ஓட்டு வந்து சேர்ந்தால் மட்டுமே அது தகுதியுள்ளதாக கருதப்படும். தாமதமாக வரக்கூடிய தபால் ஓட்டுகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்படும் என்று கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

    இரவு 8 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் அந்த வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதுவரையில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
    Next Story
    ×